வீரஆஞ்சநேயர் திருக்கோயில், களம்பூர்

ருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் அமைந்துள்ளது.

களம்பூர் கடைவீதியில் 55 ஆண்டுகளுக்கு முன் வைகுண்ட ஏகாதசி அன்று மின்சாரக் கம்பியில் சிக்கி குரங்கு ஒன்று உயிரிழந்தது. அதை நாராயணசாமி என்பவர் சாலை ஓரத்தில் குழி தோண்டி புதைத்தார். அதன் அருகில் ஆஞ்சநேயர் கோயில் கட்டினார். காலப்போக்கில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து 23 அடி உயரத்தில் அஞ்சலிஹஸ்த நிலையில் வீர ஆஞ்சநேயர் சிலை நிறுவினர். தற்போது அதற்கும் பூஜைகள் நடந்து வருகிறது.

ஆரணியை சுற்றியுள்ள பட்டு நெசவு தொழிலாளர்கள் தைப்பொங்கல் அன்று தங்கள் தொழில் மேம்படுவதற்காக பட்டு துணிகளை நெய்து, முதன் முறையாக ஆஞ்சநேயருக்கு செலுத்துகின்றனர். இதன் மூலம் தங்கள் தொழிலில் இடையூறு ஏற்படாது என்றும், நெய்த துணிகளுக்கு உரிய விலை கிடைக்குமென்றும் நம்புகின்றனர். சிற்பிகளும், கல் உடைக்கும் தொழிலாளர்களும் தங்கள் தொழிலைத் துவங்குவதற்கு முன் ஆஞ்சநேயரிடம் தங்கள் தொழில் கருவிகளை கொண்டு சிறப்பு வழிபாடு செய்துவிட்டு தொழிலை துவக்குகின்றனர். இதனால் கல்லுடைக்கும் இடங்களில் ஆபத்தின்றி பணி செய்யலாம் என்றும், செதுக்குகின்ற சிற்பம் சிறப்பாக அமையும் என்றும் நம்புகின்றனர்.

மின்சாரம் தாக்கி இறந்த குரங்கின் சமாதி கோயிலில் மூலவருக்கு முன் சமாதியுள்ளது. மூலவர், உற்சவர் வீரஆஞ்சநேயர் சுவாமிக்கு பூஜை செய்வதற்கு முன் குரங்கு சமாதிக்கு பூஜை செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.