வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காகவே பாரத் ஜோடோ யாத்திரை! ராகுல் காந்தி

மாண்டியா:  வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காக காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படுகிறது என கூறிய ராகுல்காந்தி கூறினார். மக்களிடையே பிரிவினை வாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கவே ஒற்றுமை நடைபயணம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளது டன், தமிழ்நாடு, கேரளாவை கடந்து கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடில் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 11ம் தேதி கேரளாவில் தனது நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 19 நாட்கள் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் தனது நடைபணத்தை தொடங்கினார்.

இன்று31வது நாளான இன்று கர்நாடக மாநிலம் தும்கூர், மாயசந்திரா பகுதியிலிருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைபயணத்தை தொடங்கினார். இப்பகுதி ஜனதா தளத்தின் (மதச்சார்பற்ற) கோட்டையாக கருதப்படுகிறது மற்றும் வொக்கலிகா சமூகத்தின் வாக்காளர்கள் உள்ளனர்.

தனது நடை பயணத்தின்போது, இன்று மதியம் 1 மணிக்கு துருவேகெரேயில் ராகுல் காந்தி மூன்றாவது முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  செய்தியாளர்களின், புதிய கல்விக்கொள்கை, இந்தி மொழி,  பிரிவானை வாதம், காங்கிரஸ் தலைவர் தேர்தல்  உள்பட  பல்வேறு கேள்விக்கு பதில் அளித்தார்.

இந்திய ஒற்றுமை நடைபயணம் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அல்ல. நாட்டில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உருவாக்கிவரும் பிரிவினைவாதத்திற்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கவே என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர்  உயரிய மற்றும் புரிதல் கொண்டவர்கள். இரண்டு வேட்பாளர்களில் யாரையும் ரிமோட் கண்ட்ரோல் செய்ய முடியாது என்றார்.

சுதந்திர போராட்டத்திற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் ஆங்கிலேயர் களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு உதவி செய்ததாகவும், ஆங்கிலேய அரசிடம் சாவர்க்கர் உதவி தொகைப் பெற்றதாக கூறியவர், இதுபோன்ற உண்மைகளை பாஜகவால் மறைக்க முடியாது. 

காங்கிரஸும் அதன் தலைவர்களும் விடுதலைக்காகப் போராடினார்கள் என்றார்.

மத்தியஅரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். அது நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தை முற்றிலும் அழித்துவிடும். பரவலாக்கப்பட்ட கல்வி முறையை தான் நாங்கள் கேட்கிறோம். புதிய கல்விக் கொள்கை அது ஒரு சிலரின் கையில் அதிகாரத்தை குவிக்கிறது. இது பண்பாட்டின் மீதான தாக்குதல். நமது வரலாற்றை சிதைக்கிறது. நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பரவலாக்கப்பட்ட கல்வி முறையையே நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

இந்தியா என்பது பல மாநிலங்கள் ஒன்றிணைந்தது. இந்தி என்பது தேசிய மொழி, ஆனால் எல்லா மாநில மொழிகளும், கலாசாரமும் இங்கு சம முக்கியத்துவம் வாய்ந்தது. அது நான் நமது நாட்டின் தன்மையாகும் என்றார்.

பாரத் ஜோடோ யாத்ராவில் நான் தனியாக இல்லை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமத்துவமின்மை போன்றவற்றால் சோர்ந்து போய் லட்சக்கணக்கான மக்கள் அதை செய்கிறார்கள், வெறுப்பு வன்முறையை பரப்புவது என்பது தேச விரோதச் செயல். அதனை யார் செய்தாலும் அவர்களுக்கு எதிராக போராடுவோம்.

பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை தொந்தரவு செய்யும் ஒரு குறிப்பிட்ட யோசனைக்காக எப்போதும் நிற்கிறார்கள். பல ஆயிரம் கோடி ஊடகப் பணமும், ஆற்றலும் செலவழிக்கப்பட்டு, உண்மைக்குப் புறம்பான, தவறான முறையில் என்னை வடிவமைக்கின்றன. அந்த இயந்திரம் நிதி ரீதியாகவும், எண்ணெய் வளமாகவும் இருப்பதால் அது தொடரும்.

இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.