சுற்றுலா மற்றும் எரிசக்தி அமைச்சகங்கள் இணைந்து புதிய ‘Tab & Go’ முற்கொடுப்பனவு அட்டையினை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்தி உள்ளன.
இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளால் நாடளாவிய ரீதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்ய பயன்படுத்த முடியும். அமெரிக்க டொலர்களை செலுத்தி குறித்த அட்டையினை பெற்றுக் கொள்ள முடியும்.
எரிசக்தி அமைச்சு, Dialog Axiata, Millennium IT ESP, Central Bank of Sri Lanka, Banking Partner – Sampath Bank, Ceylon Petroleum Corporation (CPC), Lanka Indian Oil ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுலா அமைச்சினால் இந்த முற்பணம் செலுத்தப்பட்ட அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா எரிபொருள் அனுமதி அட்டையின் (Prepaid card ) முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
*சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய “Pre -Paid Fuel Card ல் அதிகபட்சமாக 300 அமெரிக்க டொலர்களை மாத்திரம் செலுத்த முடியும்.
*ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயம், இலங்கையில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு மத்திய வங்கிகளால் வழங்கப்பட்ட நாணயத்தாள் ஆகியவற்றைக் கொண்ட சுற்றுலாப் பயணிகள், குறைந்தபட்சம் 50 அமெரிக்க டொலர்களுடன் குறித்த முற்கொடுப்பனவு அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
*இந்த அட்டைகளை நாடளாவிய ரீதியில் உள்ள 229 சம்பத் வங்கி கிளைகளில் மற்றும் விமான நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
*தொலைந்து போன அல்லது சேதமடைந்த அட்டைகளை நாடளாவிய ரீதியில் உள்ள சம்பத் வங்கி கிளைகளில் மாற்ற முடியும்.
*இவ் முற்கொடுப்பனவு அட்டைகள் 2 வருட காலத்திற்கு செல்லுக்குப்படியாகும்.
*முற்கொடுப்பனவு அட்டைகள் தொடர்பான விபரங்கSf;F https://fuelpass.gov.lk/touristpass எனும் தளத்தினூடாக அல்லது 1393 எனும் Hot லைன் ஊடாக 24 மணி நேரம் தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.
*300 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பயன்படுத்த மட்டுப்படுத்தப்பட்டுள்ள இவ் அட்டைகளை ஒக்டோபர் இறுதிக்குள் 500 விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.