அதிமுகவை வைத்து குளிர்காய்கிறார்கள்… பாஜகவை சூடேற்றிய ஸ்டாலின்!

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் 15 ஆவுது பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

. பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் ஆற்றிய உரை:

பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள். திமுக எனும் கல்கோட்டை மீது கல்வீசினால் அது சேதமடையாது; மாறாக மேலும் வலுதான் பெறும். கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு வந்திருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும் என்பதை கவனத்தில் கொண்டு திமுக நிர்வாகிகள் அனைவரும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போதும் புது பிரச்னை எதுவும் உருவாகி விடக்கூடாது என்ற கவலையுடன் கண்விழிக்கிறேன். இந்த கவலையை கழக நிர்வாகிகள் எனக்கு அளிக்காதபடி பார்த்து கொள்ளுங்கள்.

திமுகவின் திராவிட மாடல் ஆட்சி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே தமிழகத்தை இனி நிரந்தரமாக ஆளப்போவது திமுகவே. இதனை உறுதி செய்யும் விதத்தில் கழக நிர்வாகிகள் தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.

கட்சியின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் கழக நிர்வாகிகளின் ஒவ்வொரு செயல்பாடும் இருக்க வேண்டும். தங்களது அனைத்து செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும் என்பதையும் கட்சி நிர்வாகிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மொத்தத்தில் கட்சிக்கும், தங்களுக்கும் பெருமை தேடி தரும் விதத்திவ் கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கைகள் இருக்க வேணடும்.

திமுகவை எதிர்ப்பது என்பதை தவிர அதிமுகவுக்கு வேறெந்த கொள்கையும் கிடையாது. நான்கு பிரிவுகளாக பிரிந்தும்,, சரிந்தும் கிடக்கும் அதிமுகவுக்கு எதிர்கட்சி என்று சொல்லிக்கொள்ள எந்த பெருமையும் இல்லை. எனவே நம்மை அவர்கள் அவமதிக்க பார்ப்பார்கள். அதற்கு நாம் துளியும் இடம் அளிக்க கூடாது.

அதிமுகவில் நிலவும் கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தொண்டு குளிர்காய நினைக்கும் பாஜக, எதிர்வரும் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்ய தயாராக உள்ளது. மதம், ஆன்மிக உணர்வை மக்கள் மனதில் தூண்டிவிட்டு தமிழகத்தில் கால்பதிக்க பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.