உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப்படைகளுக்கு புதிய ராணுவத் தளபதி நியமனம்

உக்ரைனுக்கு எதிரான போரை நடத்த புதிய ராணுவத் தளபதி ஜெனரலை ரஷ்ய அதிபர் புதின் நியமித்துள்ளார்.

உக்ரைன் போரில் களத்தில் நிற்கும் ரஷ்யப் படைகளுக்கு புதிய ஜெனராக பொறுப்பேற்றுள்ள செர்கய் சர்வோக்கின் உத்தரவுகள் பிறப்பிப்பார் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யா போரில் கைப்பற்றிய பகுதிகளில் மீண்டும் உக்ரைன் படைகளின் கை ஓங்கி வருகிறது. பொதுமக்களின் எதிர்ப்பும் அதிகளவில் இருப்பதையடுத்து கெர்சன் மாகாணத்தில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியுள்ளன.

சுமார் 2500 சதுர கிலோமீட்டர் நிலங்களை உக்ரைன் படைகள் மீட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.