மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.
இந்தத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. தகுதியான மாணவர்கள் அக்டோபர் 15-ம் தேதிக்குள் http://scholarships.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.