பெங்களூரு,
11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, சென்னை, மும்பை உள்பட 11 நகரங்களில் அரங்கேறுகிறது. இதில் பெங்களூரு கன்டீவாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணியை எதிர்கொண்டது.
இரு அணிகளும் சரிசமமாக மல்லுக்கட்டிய இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை பதம் பார்த்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. வெற்றிக்கான கோலை பெங்களூரு அணி வீரர் ஆலன் கோஸ்டா 87-வது நிமிடத்தில் அடித்தார்.
இன்று புனேயில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் எப்.சி., முன்னாள் சாம்பியன் மும்பை சிட்டியை சந்திக்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.