ஒரே நிமிடத்தில் கதிகலங்கிய ஜிபி முத்து; சப்போர்ட்டுக்கு இறங்கிய..நெட்டிசன்கள்!

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை 5 சீசன்களாக நடந்து முடிந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. இதில், ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த டிக் டாக் நாயகன் ஜி.பி.முத்து கலந்துகொள்வார் என பெரிதும் பேசப்பட்டது.

ஜிபி முத்துவை பொறுத்தவரையில் டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் என எந்த வீடியோ தளங்களுக்குள் நுழைந்தாலும் ஜி.பி.முத்து வீடியோக்கள் அடிக்கடி ட்ரெண்டிங் ஆகிக்கொண்டு இருப்பதை காண முடியும்.

செத்த பயலே.. நாரப்பயலே.. என, அக்மார்க் திருநெல்வேலி தமிழில் தன்னை கிண்டல் செய்யும் சமூக வலைதளவாசிகளை ஜி.பி.முத்து திட்டக் கூடிய வார்த்தைகள் அனைத்து தரப்பினருமே ரசிக்கும் படியாக இருக்கும்.

ஒரு சில நேரங்களில் யதார்த்தமாக இரட்டை அர்த்தங்களில் பேசி தானாகவே சிக்கலை ஏற்படுத்திக்கொண்டு மன்னிப்பு கேட்டு கிராமத்து எளிமையை கண்முன் கொண்டு வந்துவிடுவார்.

குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்த ஜி.பி.முத்துவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்து பணம், புகழ் கிடைக்கும் போதும் தனது பழசை மறக்காமல், இன்னமும் தன்னுடைய வெகுளித்தனத்துடன் இருப்பது தான் இவரது பலமாக கருதப்படுகிறது.

தற்போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்திருப்பது ஜிபி முத்து வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டாலும் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பார் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் துவக்க நிகழ்சியின்போது முதல் போட்டியாளராக ஜிபி முத்துவை நடிகர் கமல் உள்ளே அனுப்பினார். அங்கு சென்ற மறு நிமிடத்தில் ஜிபி முத்து, ‘யாரும் இல்ல சார்.. பயமாக இருக்கு.. உள்ளே யாரையாவது அனுப்பி வையுங்கள்’ என, கதிகலங்கி கெஞ்சிய சம்பவம் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் போலயே என நினைக்க வைத்துள்ளது.

அதே சமயம் பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்கி இருக்கும் ஜி.பி.முத்துவுக்காக சமூக வலைதளவாசிகள் ஆர்மி உருவாக்கி தங்களது அட்ராசிட்டியை துவக்கி இருக்கின்றனர்.

மேலும், ஜிபி முத்து எப்படி விளையாடினாலும், அவரை வெற்றி வைப்பது மட்டுமே எங்களுடைய இலக்கு என, சமூக வலைதளவாசிகள் கங்கணம் கட்டிக் கொண்டு தயாராக இருப்பது போட்டியின் மீது ஆர்வத்தை தூண்டும் விதமாகவே இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.