காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் கழுத்தறுத்து கொடூரமாக கொலை..!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள குர்ராடா கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கட சூரிய நாராயணா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவகி என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால், சூரிய நாராயணாவின் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சூரிய நாராயணா, இன்று அவ்வழியாக டூவீலரில் வந்த தேவகியை தடுத்து நிறுத்தியுள்ளார். நடுரோட்டில் வைத்து தேவகியை கத்தியால் கழுத்தை அறுத்தார். இதனால் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே சரிந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த தேவகியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே தேவகி இறந்து விட்டதாக கூறினர்.

பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சூரிய நாராயணாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.