பாட்னாவை சேர்ந்தவர் ரேகா. இவருக்கு திடீரென காது வலி ஏற்பட்டதால் பிரபல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அவரை பரிசோதித்த மருத்துவர் ரேகாவின் காதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த ஜூலை 11ம் தேதி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த செவிலியர் ஒருவர் ரேகாவுக்கு ஊசி போட்டுள்ளார். ஆனால், ஊசி போட்ட சிறிது நேரத்தில் கையில் வலி ஏற்பட்டு, கை முழுவதுமாக நீல நிறமாக மாறியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரேகா செவிலியரிடம் தெரிவித்தனர். ஆனால், செவிலியர் இதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. பின்பு கையின் நிறம் கருப்பாக மாறியது.
கையின் வலி தாங்காமல் கண்ணீர் விட்டு கதறிய ரேகா அந்த மருத்துவமனையில் இருந்து வெளியே சென்று அருகில் உள்ள ஐஜிஐஎம்எஸ் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கையை உடனே நீக்க அறிவுறுத்தினர். ஒரு கை போனதால் ரேகாவின் திருமணம் நின்று போனது. வாழ்க்கையை இழந்து ஒற்றை கையுடன் போராடும் ரேகா, நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்தும் பயனில்லை. பிரபல மருத்துவமனை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க மறுக்கிறது. மேலும், அந்த மருத்துவமனைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளார்.
இதனால் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து போன் மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் வந்ததை கண்ணீருடன் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.