கோவை அருகே பரபரப்பு.! கோபித்துக்கொண்டு மனைவி சென்றதால் கணவர் தீக்குளித்து தற்கொலை.!

கோவை மாவட்டத்தில் மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் செஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா (43). இவரது மனைவி ராதா (40). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு ராஜா வந்ததால், மீண்டும் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி ராதா கோபித்துக் கொண்டு அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த ராஜா தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் இருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். தீயானது உடல் முழுவதும் பரவியதால் ராஜா அலறியுள்ளார்.

இவரின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனே ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ராஜா உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.