சட்டமன்ற கூட்டத்தில் இருக்கு… சீறும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.!

மதுரை காந்தி மியூசியத்தில் அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் காந்தி மீயூசிய வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று வளாகத்தில் அமைந்துள்ள புதர் மண்டிய பகுதிகளை தூய்மை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியது: அதிமுகவின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் சிறந்த நகரங்களுக்கான விருதினை மதுரையும், சென்னையும் பெற்று இருந்தது. ஆனால், சமீபத்தில் 10 லட்சம் மக்கள் தொகை கணக்கீடு அடிப்படையில் 45 நகரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் சென்னை 44 வது இடத்திலும் மதுரை கடைசி இடமான 45 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. அரசு நகரத் தூய்மையின் மீது கவனம் செலுத்தி பணியினை மேற்கொள்ள வேண்டும்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் பல குடும்பங்கள் பாதுகாக்கப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்பொழுது அதை வலுவாக மீண்டும் கொண்டுவரப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.

தென் மாவட்டங்களில் சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது வேதனையை அளிக்கிறது. 6095 வழக்குகள் சிறாருக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளது. இதன் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம் பின்தங்கி இருப்பதும் தற்கொலை பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது இருக்கிறது.

தமிழக முதல்வர் சென்னையில் 80% வடிகால் பணிகள் முடிந்ததாக கூறி இருக்கிறார். ஆனால் 30 முதல் 40 சதவீதம் வரையே பணிகள் நிறைவடைந்து இருப்பதாக கள நிலவரமாக உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழையின் பொழுது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

அதேபோல அரசு வடகிழக்கு பருவமனைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். ஆளுநரின் திருக்குறள் பற்றிய கேள்விக்கு. திருக்குறள் பற்றி கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆளுநரின் கருத்து சிலர் அதனை விளம்பரத்திற்காக எதிர்த்து வருகின்றனர். பிரதமர் மோடி ஆளுநர் என முக்கிய தலைவர்கள் பேசும்போது திருக்குறளை குறிப்பிட்டு வருவது தமிழ் மொழிக்கான பெருமை.

திருமாவளவன் சைவம் வைணவம் என அறநிலையத்துறையை பிரிக்க வேண்டும் என கூறுகிறார் இது பற்றிய கேள்விக்கு, சைவம், வைணவம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கின்றது.

எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தில் மக்களுக்கான முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசுவோம். குறிப்பாக 150 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்படும் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.