திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல பூஜை கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதால் தினமும் எத்தனை பக்தர்கள் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். இதற்கிடையே ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 22ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
இதற்கான ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியுள்ளது. ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடைந்த பின்னர் சித்திரை ஆட்டத் திருநாளுக்காக வரும் 24ம் தேதி மாலை கோயில் நடை மீண்டும் திறக்கப்படும். மறுநாள் (25ம் தேதி) நடை சாத்தப்படும்.