கரூர் குளித்தலை அருகே, குடும்பத்துடன் சாமி கும்பிட வந்தபோது, காவிரி ஆற்றில் மூழ்கி, இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜன், ஜெகநாதன் குடும்பத்தினர், லாலாப்பேட்டை அருகேயுள்ள கொம்பாடிபட்டியில் சாமி கும்பிட வந்திருந்தனர்.
காவிரி ஆற்றில் தீர்த்தக்குடம் எடுப்பதற்காக குளித்த போது, மணல் சுழலில் சிக்கி, விஷ்வா, புருஷோத்தமன் என்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கினர்.
புருஷோத்தமன் மட்டும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விஷ்வாவின் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.