சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஒருமணி நேரத்தில் முடிந்துவிடும்: கசிந்த ரகசிய திட்டம்


ராணியாருக்கு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சடங்குகள் எதுவும் இருக்காது, குறைவான சடங்குகளுடன் முடிவுக்கு வரும்

சிறப்பு விருந்தினர்கள் எண்ணிக்கையும் 8,000ல் இருந்து 2,000 என குறைக்கப்படும் – மன்னர் சார்லஸ் கோரிக்கை

பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவானது ஒருமணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என ராஜகுடும்ப வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்படும் முடிசூட்டும் விழாவானது குறைவான சடங்குகளுடன் முடிவுக்கு வரும் எனவும், ராணியாருக்கு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சடங்குகள் எதுவும் இருக்காது என்றே தெரிய வந்துள்ளது.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஒருமணி நேரத்தில் முடிந்துவிடும்: கசிந்த ரகசிய திட்டம் | King Charles Slimmed Coronation Secrets Revealed

@PA

பொதுவாக நான்கு மணி நேரம் வரையில் சடங்குகள் நீடிக்கும் என்ற நிலையில், தற்போது ஒருமணி நேரத்திற்குள் முடிவுக்கு வரும் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, சிறப்பு விருந்தினர்கள் எண்ணிக்கையும் 8,000ல் இருந்து 2,000 என குறைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ராஜகுடும்ப விழாவுக்கான பாரம்பரிய உடைகளுக்கு பதிலாக விருந்தினர்களுக்கு ஏற்ற உடைகளை அனுமதிக்க உள்ளனர்.
மொத்த விழாவும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் தலைமையில், அல்லது முக்கிய பொறுப்பில் அவர் உட்படுத்தப்படுவார் என்றே கூறப்படுகிறது.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஒருமணி நேரத்தில் முடிந்துவிடும்: கசிந்த ரகசிய திட்டம் | King Charles Slimmed Coronation Secrets Revealed

@getty

கடந்த 70 ஆண்டுகளில் உலகம் மிகவும் மாறிவிட்டது எனவும், அதற்கு ஏற்றபோல் முடிசூட்டு விழாவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என மன்னர் சார்லஸ் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ராணியாரின் முடிசூட்டு விழாவின் போது சுமார் 8,000 விருந்தினர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வெஸ்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட விழாவில் ஒரு நொடி கூட நகராமல் பொறுமையாக கலந்துகொண்டனர்.
ஆனால் தற்போது 2,000 விருந்தினர்கள் மட்டுமே மன்னர் சார்லஸ் முடிசூட்டும் விழாவில் அழைக்கப்பட உள்ளனர். 

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஒருமணி நேரத்தில் முடிந்துவிடும்: கசிந்த ரகசிய திட்டம் | King Charles Slimmed Coronation Secrets Revealed

Pictured: the British Gold State Coach



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.