சாலைக்கு இடையூறு: 200 ஆண்டுகள் பழமையான புளியமரத்தை உயிருடன் இடமாற்றிய தனியார் நிறுவனம்

செங்கல்பட்டில் சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த 200 ஆண்டுகள் பழமையான புளியமரம், வேருடன் பிடுங்கி ராட்சத கிரேன்கள் உதவியுடன் மீண்டும் நடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அறப்பேடு பகுதியில் ஆக்சிஜன் சேமித்து வைக்கும் சிலிண்டர்களை உருவாக்கும் தனியார் நிறுவன கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு செல்வதற்காக புதிய சாலைகள் அமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.
image
நிறுவனத்திற்கு கனரக வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சில மரங்களை வெட்டவேண்டிய சூழல் ஏற்பட்டது. தனியார் நிறுவனம் அனுமதி வாங்கி இந்த சாலையை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
image
இந்நிலையில் நெடுஞ்சாலையில் இருக்கும் சுமார் 200 ஆண்டுகள் பழமையான புளிய மரத்தை வெட்டவேண்டிய சூழல் ஏற்பட்டதால் புளிய மரத்தை உயிருடன் மீட்டு எடுக்க, அதற்கான நிபுணர்களின் உதவியை நாடியது அந்த நிறுவனம். இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு 200 ஆண்டுகள் பழமையான புளிய மரம் வெட்டப்பட்டு, ரசாயன கலவை மூலம் பதப்படுத்தப்பட்டது. பதப்படுத்தப்பட்ட மரம் ராட்சத கிரேன்களின் உதவியுடன் வேறு இடத்தில் உயிருடன் மீண்டும் நடப்பட்டது.
image
இதே சாலை பணி அமைக்கும் பொழுது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தேக்கு மரம், புங்கமரம் ஆகியவையும் உயிருடன் மீண்டும் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 200 ஆண்டுகள் பழமையான மரம் மீண்டும் நடப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.