கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 17 வயது ஹரி கிருஷ்ணன் என்கிற சிறுவனுக்கு குடல் அறுவை சிகிச்சையில், பாதுகாப்பற்ற முறையில் குடலை வைத்தது மட்டுமில்லாமல், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் தூங்கியதால் சிறுவன் பலியாகியதாக தாய் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையிலும், காணொளியில் அடிப்படையிலும் கீழ் காணும் செய்தி சொல்லப்படுகிறது.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுவன் ஹரி கிருஷ்ணனுக்கு வயிற்றுவலி காரணமாக குடல் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் குடலை பாதுகாப்பாக வைக்க பயன்படும் சர்ஜரி பேக் மருத்துவமனையில் இல்லை என்று தெரிகிறது.
மேலும், சிறுவனின் உடலுக்கு வெளியே அவரது குடல் பாதுகாப்பற்ற முறையில் வைத்து, மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மின்னல் கொடி, தனியார் மருந்தகங்களில் இருந்து சர்ஜரி பேக்கை வாங்கி வந்து ஹரி கிருஷ்ணனுக்கு பொருத்தி பாதுகாத்துள்ளார்.
இருப்பினும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் ஆனந்த் என்பவர், முறையாக கவனிக்காமல் தூங்கியதால் ஹரி கிருஷ்ணன் தற்போது உயிரிழந்து வீட்டதாகவும், கவன குறைவாக இருந்த மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது தாய் மின்னல் கொடி காவல்துறையினரிடம் கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கூறி ஒரு கடிதத்தில் தன்னிடம் மருத்துவமனை நிர்வாகம் கையொப்பம் வாங்கி உள்ளதாகவும் தாய் மின்னல் கொடி புகார் அளித்தார்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 17 வயது ஹரி கிருஷ்ணன் என்கிற சிறுவனுக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் குடலை பாதுகாப்பாக வைக்க பயன்படும் சர்ஜரி பேக் மருத்துவமனையில் இல்லாததால் அவரது உடலுக்கு வெளியே அவரது குடல் பாதுகாப்பற்ற முறையில்.#news pic.twitter.com/QwHzC47vZh— Selva Suriyan (@T_selvasuriyan) October 8, 2022