ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரையை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்தப் பேருந்து சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் வந்தபோது மின்னணு முறையில் கட்டணம் செலுத்த பாஸ்டேக்கில் பணம் இல்லை என அந்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.
பாஸ்டேக் உள்ள ஒரு பேருந்து பழுதானதால் அந்த பேருந்திற்கு பதிலாக இந்தப் பேருந்து விடப்பட்டுள்ளது. இதற்கு பாஸ்டேக் கட்டணம் முடிந்திருப்பது பற்றி தெரியாது என பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து நடத்துனர், பணிமனை மேலாளருக்குத் தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, போன் மூலம் டோல்கேட் கட்டணம் செலுத்திய பின்புதான் பேருந்து அனுமதிக்கப்பட்டது.
சுங்கச்சாவடியிலேயே பேருந்து ஒரு மணிநேரமாக காத்திருந்ததால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். சுங்கச்சாவடியைக் கடக்க போதிய கட்டணம் இருக்கிறதா எனப் பார்க்காமலேயே பேருந்தை ஓட்டியதாக அவர்கள் கோபம் அடைந்தனர்.