தினேஷ் கார்த்திக்கை பார்த்து அவர் கத்துக்கனும்! இல்லேன்னா இதான் கதி… எச்சரிக்கும் ஜாம்பவான்


தினேஷ் கார்த்திக்கை பார்த்து ரிஷப் பண்ட் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜாமப்வான் அஜய் ஜடேஜா எச்சரித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் நான்காவது இடத்தில் களமிறங்கினார்.

டி20 உலக கோப்பை பிளேயிங் லெவனில் ரிஷப் பன்ட் அல்லது தினேஷ் கார்த்திக் யாரேனும் ஒருவரை மட்டுமே விளையாட வைக்க முடியும் என்ற விவாதங்கள் நிலவி வருகின்றன.
இருப்பினும் இரண்டு வீரர்களுக்கும் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடரின் போது வாய்ப்பு கொடுத்து பார்க்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் கிடைக்கும் வாய்ப்புகளை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் ரிஷப் பண்ட் அதனை தவறவிட்டிருக்கிறார்.

தினேஷ் கார்த்திக்கை பார்த்து அவர் கத்துக்கனும்! இல்லேன்னா இதான் கதி... எச்சரிக்கும் ஜாம்பவான் | Ajay Jadeja Dinesh Karthik Rishabh Pant

GETTYIMAGES, TWITTER ICC

இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, ரிஷப் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை தவறவிட்டு வருகிறார். தினேஷ் கார்த்திக் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியில் அவ்வப்போது உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருக்கிறார். தற்போது அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து இந்திய அணி அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறது.

ரிஷப் மீண்டும் கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னை நிரூபித்து காட்ட வேண்டும். கார்த்திக்கை பார்த்து கத்துக்கனும், அதை செய்யவில்லை என்றால்  தேசிய அணியிலிருந்து அவரை நீக்குவதற்கும் நிர்வாகம் தயங்காது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்கை பார்த்து அவர் கத்துக்கனும்! இல்லேன்னா இதான் கதி... எச்சரிக்கும் ஜாம்பவான் | Ajay Jadeja Dinesh Karthik Rishabh Pant

zeenews



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.