சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலையோர கடைகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காய்கறி வாங்கி மக்களிடம் கலந்துரையாடினார்.
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், மயிலாப்பூர் பகுதியில் தனது காரை நிறுத்தி சாலையோர கடைக்கு சென்றார்.
அவர் சாலையோர கடைகளில் கீரை மற்றும் காய்கறியை வாங்கினார். அப்போது காய்கறி விற்பனை பெண் திடீரென நிர்மலா சீத்தாராமன் காலில் விழுந்தார். உடனே அவர் இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என அறிவுரை கூறினார்.
இதனையடுத்து காய்கறிகளை வாங்கி கொண்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் உரையாடினார். பின்னர் விற்பனையாளர்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விசாரித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
newstm.in