தேசிய மாநாட்டை புறக்கணித்த ஆர்ஜேடி மாநில தலைவர் ஜக்தானந்த் சிங் – கட்சியில் புதிய குழப்பம்

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேசிய மாநாட்டை  அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங் புறக்கணித்தது கட்சிக்குள் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜாமீனில் உள்ள அவர் அக்டோபர் 10 முதல் 25ஆம் தேதி வரை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார். அதற்கு அனுமதி கிடைத்த நிலையில் நாளை லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூருக்கு செல்கிறார்.

image
இந்நிலையில் டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேசிய மாநாட்டை  அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங் புறக்கணித்தது கட்சிக்குள் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில தினங்களுக்கு முன், பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த ஜக்தானந்த் சிங்கின் மகன் சுதாகர் சிங்,  வேளாண் துறையில் ஊழல் மலிந்து விட்டது என தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதன்மூலம்  ஜக்தானந்த் சிங் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

image
இதனைத்தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து ஜக்தானந்த் சிங்கை நீக்கிவிட்டு புதிய தலைவராக அப்துல் பாரி சித்திக், ஷியாம் ரஜக் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியதும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் படிக்க: நடப்பு நிதியாண்டின் நேரடி வரி வசூல் உயர்வு… விவரங்களை வெளியிட்ட நிதி அமைச்சகம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.