இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்பத் நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்.
உலகிற்கு ஓர் அருட்கொடையாக முஹம்மது நபிகள் நாயகம் அவர்கள் அனுப்பப்பட்டார்.
40 வயதில் நபித்துவத்தைப் பெற்றுக்கொண்ட நபியவர்கள் 10 வருடகாலம் மக்காவில் அழைப்புப் பணியில் ஈடுபட்டார்கள்.
மக்களுக்கு வாழ்க்கையின் உண்மைத் தன்மையை புரிய வைத்து மனிதனைப் பூரண மனிதனாக்கும் பணியில் ஈடுபட்ட நபியவர்கள் பல சொல்லொணா இன்னல்களையும் சந்தித்துள்ளார்.
அவர்களின்; போதனைகள் உலக வாழ் மக்கள் அனைவரையும் சார்ந்ததாக அமைந்துள்ளது. சமாதானம், அமைதி, ஒற்றுமை, சகவாழ்வு உட்பட மனித வாழ்வுக்கான சகல துறைகளிலும் அவர் வழிகாட்டியாத் திகழ்ந்தள்ளார். நபிகள் நாயகம் தனது 63 ஆவது வயதில் மதினாவில் மறைந்தார். அன்னாரின் பிறந்த தினமான மீலாத் தினத்தில் உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு நாடாளவிய ரீதியிலும்; இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதான நிகழ்வு பேருவளை ஜாமியா நளிமீய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10.30இற்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
இதேவேளை, மீலாத் தினத்தை முன்னிட்டு பொரளை ஜூம்மா பள்ளிவாசல்; நிர்வாக சபை, சர்வமத நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இன்று பிற்பகல் மூன்று மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும்;. பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் சமய பெரியார்களும் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். கண்டி – தென்னகும்புர முஹைதீன் ஜூம்மா மஸ்ஜிதும் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் இன்று காலை 8.30இற்கு மஸ்ஜித் வளாகத்தில் ஆரம்பமாகும். இதேவேளை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.