நாளை (10)விசேட வங்கி விடுமுறை தினம் என்பதனால் அனைத்து வர்த்தக வங்கிகளும் மூடப்பட்டிருக்குமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதினால் ,( 09 ஞாயிற்றுக்கிழமை ) வங்கி விடுமுறை தினத்திற்கு பதிலாக, நாளைய தினம் விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை. கொழும்பு பங்குச் சந்தையும் நாளை மூடப்பட்டிருக்கும்.