தீபாவளி பண்டிகை நெருங்குவதால், விடுமுறை தினமானஇன்று, சேலத்திலுள்ள ஜவுளிக்கடைகளில் புத்தாடை வாங்க கூட்டம் அலைமோதியது.
சேலம் டவுன் மற்றும் சின்ன கடை வீதி, நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் பகுதிகளிலுள்ள துணிக்கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
சேலம் நான்கு ரோடு மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் அதிகம் சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.