பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உலக அளவில் பதிவு செய்த கஷ்மீரி பெண்கள்

Anti Terrorism: காஷ்மீரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் UNHRC நிகழ்வில் உரையாற்றி, தங்கள் அவலத்தை உலகின் முன் கொண்டுவந்தததற்கு இந்தியா வரவேற்பு தெரிவிக்கிறது. முதன்முதலாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) நிகழ்வில் உரையாற்றினார்கள். தஸ்லீமாவும் ஷுஐபும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின், குறிப்பாக காஷ்மீரி பெண்களின் அவல நிலையை எடுத்துரைத்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய தஸ்லீமா, “பயங்கரவாதிகளால் பல நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்”, “நாங்கள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறோம்…” என்று கூறினார்.

மேலும் படிக்க | நித்தியானந்தா அளிக்கும் கைலாசா விருதுகள்: தர்மரட்சகர் விருது பெறும் திருச்சி சூர்யா சிவா

தஸ்லீமா மற்றும் ஷுஐப் இருவரும் அடிமட்ட அளவில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பலரின் அவல நிலையை ஆவணப்படுத்தியுள்ளனர். “எனது குடும்பத்தைப் போலவே, ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தங்கள் உயிர்களை இழந்துள்ளது கஷ்மீர் பள்ளாத்தாக்குப் பகுதியின் அவலம்…. சுரண்டலைப் பற்றி ஒரு பாதிக்கப்பட்ட பெண்கள் பேசுவது மிகவும் சவாலானது” என்று கூறினார். ஷுஐபின் தந்தை பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து அச்சத்துடனும் அச்சுறுத்தலுடனும் வாழ்கின்றனர். இந்த சவால்களை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகத்தின் மீது எனக்கு வலுவான நம்பிக்கை உள்ளது,” என்றார். பாதிக்கப்பட்டவர்களின் நிலையை எடுத்துரைக்கும் திரைப்படத்தையும் அவர் காட்டினார்.

மேலும் படிக்க | e-rupee: பாதுகாப்பான பணப்பரிமாற்றத்திற்கு இந்திய அரசின் முதல் டிஜிட்டல் ரூபாய்

இதற்கிடையில், இந்த வளர்ச்சியை வரவேற்ற வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தினசரி செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார்.

“பயங்கரவாதம் பற்றி நாம் உணர்ச்சியற்ற முறையில் பேசுகிறோம், பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகக் கேட்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் வேதனையை, கருத்தை கவுன்சிலில் நேரடியாகக் தெரிவிப்பது ஒரு நல்ல நடவடிக்கை” என்று அவர் தெரிவித்தார்.

“இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை என்னால் இப்போது வெளிப்படுத்த முடியாது, ஆனால் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கருத்து, உலக அளவில் முன்வைக்கப்பட வேண்டியது, அதன் வலி சர்வதேச சமூகத்திற்கு தெரிய வேண்டியதும் அவசியம். அவை வெறும் எண்கள் அல்லது புள்ளிவிவரங்கள் அல்ல” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | இந்த வங்கிகளில் லோன் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.