மணிரத்தினம் இயக்கத்தில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு கடந்த செப்டம்பர்-30ம் தேதி திரையரங்குகளை தெறிக்கவிடும் வகையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்களை பெரிதும் திருப்திபடுத்தியதோடு மட்டுமின்றி பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை வாரி குவித்துள்ளது. கல்கியின் கைவண்ணத்தில் 1995ம் ஆண்டு எழுதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ படத்தை திரைப்பட வடிவில் கொடுக்க பல ஆண்டு காலமாக பலரும் முயற்சித்து தோல்வியுற்ற நிலையில் தற்போது அதனை மணிரத்தினம் சாதித்து காட்டி இருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், நாசர், அஷ்வின், கிஷோர், ரியாஸ்கான் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளங்களே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் அமைந்துள்ள பாடல்களை ரசிகர்கள் இன்றளவு வைப் செய்து வருகின்றனர். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆனபோதிலும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஈர்ப்பு இன்னும் குறைந்தபாடில்லை. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது, இப்படம் ஏற்கனவே பல திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், கூடுதலாக சில திரையரங்குகளை பிடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இவ்வாறு ‘பொன்னியின் செல்வன்’ எக்கச்சக்கமான திரையரங்குகளை ஆக்கிரமித்து இருப்பதால் இதனை மீறி வேறொரு புதிய தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பில்லை. ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் வெளியான ஐந்தே நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் எஃபெக்டால் கிட்டத்தட்ட நான்கு தமிழ் திரைப்படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் தள்ளிப்போய் உள்ளது. அதாவது அருண் விஜய்யின் ‘பார்டர்’ திரைப்படம், அரவிந் சாமியின் ‘சதுரங்கவேட்டை-2’, சுந்தர்.சி-ன் ‘காஃபி வித் காதல்’ மற்றும் சிவாவின் ‘காசேதான் கடவுளடா’ போன்ற நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. அக்டோபர்-7ம் தேதியன்று வெளியிடப்படுவதாக இருந்த இந்த நான்கு படங்களின் வெளியீட்டு தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.