மயிலாப்பூரில் சுண்டைக்காய் விலை கேட்டா தீர்வு வராது – ப.சிதம்பரம் கலாய்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே குட்டப்பாளைத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட காங்கிரசின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வந்திருந்தார். அவரை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர் பேசியபோது

அந்த எண்ணமே தவறு

கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கு பால் உற்பத்தியை பெருகுவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தரம் வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பாரம்பரிய இனங்களை பாதுகாக்கும் முயற்சிகளை பாரம்பரிய மாடுகள் மட்டுமின்றி மரங்கள் காய்கறி வகைகள் இவற்றை ஊக்கப்படுத்த வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து தான் எல்லாம் யோசனைகள் வருகிறது என்ற அந்த எண்ணமே தவறு. நமது பாரம்பரியமான எண்ணங்களை எல்லாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் என்றார்.

இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்

தொடர்ந்து பொருளாதாரம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பொருளாதாரம் அது எனக்கு தெரியாது என நகைச்சுவையாக தெரிவித்தார். அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மைய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றது, இந்தியாவில் வட்டி விகிதத்தை குறைவாக உயர்த்துவதால் நூறு பில்லியன் டாலர் அன்னிய செலாவணியை ரிசர்வ் வங்கி விற்று உள்ளதே என்ற கேள்விக்கு, இது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நான்கு விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வளர்ச்சி குறையும் , ஜிடிபி 6.5 க்கு வராது. இந்தியாவின் வளர்ச்சி 6.5 என உலக வங்கி கூறிய பிறகு அதை அரை மனதோடு மத்திய அரசு அதை ஏற்றுக் கொள்கிறது. 6.5 வருவதும் ரொம்ப கடினம். வளர்ச்சி குறைந்து விலைவாசி உயரும்.அதை ரிசர்வ் வங்கி கவர்னரும் ஒப்புக்கொள்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

மைலாப்பூர் மார்கெட்டில் நிர்மலா சீதாராமன்

மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாகிறது.கடந்த ஆறு மாதத்தில் தங்க இறக்குமதி மட்டும் ரூ.2000 கோடி டாலர் அதாவது 160 ஆயிரம் கோடி ரூபாய் நடப்புக் கணக்கு பற்றாக்குறை விரியும்.கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான எதிர்காலம் என்று சொல்ல முடியாது. இதில் தான் அரசு மத்திய அரசு சமயோசிதமாக, புத்திசாலித்தனமாக கலந்தாலோசிப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து சென்னை வந்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மைலாப்பூர் மார்கெட்டில் காய்கறி வாங்கியதாய் குறித்து ப.சிதம்பரம் தாக்கி பேசினார்.

சென்னை மயிலாப்பூரில் சென்று சுண்டைக்காய் விலை என்ன,,,?? கீரை விலை விலை என்ன,,,?? என்று கேட்டால் மட்டும் இதற்கெல்லாம் தீர்வாகாது. ஜப்பான் நாட்டுடன் செய்து ஒப்பந்தப்படி டாலருக்கு நிகராக நமது ரூபாயை நிலையாக வைத்துக் கொள்ள ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. டாலரை கையிருப்பில் சீராக வைத்துக் கொள்ள ஸ்வாப் செய்யும் அளவுக்கு செல்ல வேண்டியது இல்லை. தற்போது கூட ரிசர்வ் வங்கியில் 500 பில்லியன் டாலர் அளவிற்கு கையிருப்பு உள்ளது.ஆனால் கரன்சி ஸ்வாப் அளவுக்கு நாம் தள்ளப்பட மாட்டோம் என நம்புவதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.