நடிகை மகிமா நம்பியார் தற்போது விஜய் ஆண்டனியுடன் ரத்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரும்பிய போது வாகனத்தில் மகிமா நம்பியார் அசந்து தூங்கியுள்ளார். அப்போது உடன்வந்த இயக்குநர் சி.எஸ் அமுதன் அதை படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ரத்தம் குழுவின் கடும் உழைப்பு என பதிவிட்டார்.
படத்தை பார்த்த நெட்டிசன்கள் கடின உழைப்புதான் என சிலர் கிண்டலடித்தும், சிலர் ஒரு பெண் தூங்குவதை அவருக்கு தெரியாமல் படம் எடுப்பது தவறு அதை பகிர்வது அதைவிட தவறு என விமர்சித்துள்ளனர். இயக்குநர் சி.எஸ்.அமுதனின் செயல் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது.
புகைப்படத்தை பார்த்த நடிகை மகிமா நம்பியார், அவமானமாக போச்சு, இனி நான் இந்தியா பக்கமே திரும்ப மாட்டேன் என கிண்டலாக பதில் அளித்தார். போட்டோவை பார்க்கும்போது தன் போட்டோவை பார்ப்பது போல் உள்ளது என நடிகர் விஜய் ஆண்டனி கூறி உள்ளார்.
newstm.in