கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கிப்சன்(35) என்பவர் கூலி வேலை செய்து வருகின்றார். இவருக்கு மேரி ஷைனி (32) என்ற மனைவியும், டெல்பி(65) என்ற தாயும் இருக்கின்றார். டெல்பிக்கு உடல் நிலை சரியில்லை எனும் காரணத்தால் ஸ்கேன் எடுக்க மாமியாரும், மருமகளும் மருத்துவுமனைக்கு சென்றுள்ளனர்.
இருவரும் பேருந்தில் சென்ற போது குழித்துறையை தாண்டி வெட்டுமணி பேருந்து நிறுத்தத்தில் நின்றது. பஸ்ஸுக்குள் இருந்த ஒரு பெண் டெல்பியின் 2½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இறங்கி ஓடியுள்ளார். இதை கண்ட டெல்பி அலறியடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேரிஷைனி மாமியாரின் செயினை பறித்துக் கொண்டு ஓடிய அந்த பெண்ணை விடாமல் துரத்தி சென்று பிடித்து தங்கச் சங்கிலியை மீட்டார். பின் அந்த திருடியை பிடித்துவைத்து நிலையில் பொதுமக்கள் உதவியுடன் போலீசிடம் ஒப்படைத்தார்.
மாமியாருக்கு பகுபலியாக மாறி பாய்ந்து ஓடி செயினை மீட்ட மருமகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதை திருடிய பெண் பொள்ளாச்சி கொள்ளைக்காபாளையம் பவானி (39) என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.