இளவரசர் ஹரி – மேகன் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக இருந்த வில்லியம்.
அப்போது அவர் பேசியது தொடர்பாக வெளியான தகவல்கள்.
இளவரசர் ஹரி – மேகன் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக இருந்த வில்லியம் அப்போது பேசியது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை அரச குடும்ப எழுத்தாளர் கேட்டி நிக்கோல் தனது Harry: Life, Loss, and Love என்ற ஹரியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2011ல் இளவரசர் வில்லியம் – கேட் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக வில்லியமின் இளைய சகோதரர் இளவரசர் ஹரி இருந்தார்.
அப்போது அவரின் பேசிய பேச்சு வேடிக்கையாகவும் இனிமையாகவும் இருந்தபோதிலும், அது மணப்பெண்ணாக இருந்த கேட்டை உணர்ச்சிவசப்பட வைத்து கண்ணீரை வரவழைத்ததாக கூறப்பட்டுள்ளது.
ஹரி பாசமாகவும், வேடிக்கையாகவும் பேசியது வில்லியம் மனதை தொடும் வகையில் இருந்ததாக கேட்டி நிக்கோல் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல இளவரசர் வில்லியம் கடந்த 2018ல் ஹரி – மேகன் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக இருந்தார்.
townandcountrymag
அப்போது அவர் ஆபாசம் கலந்த நகைச்சுவைகளைச் சொன்னதாக கூறப்படுகிறது.
இது சிரிக்கவும் முகம் சுழிக்கவும் வைக்கும்படியான நகைச்சுவையாக இருந்திருக்கிறது.
திருமணத்தின் போது ஹரி விளக்கு ஒன்றை மாற்றுவதற்காக ஏணியில் ஏறும் போது கீழே விழுந்தார், இதையடுத்து வில்லியம் புதுமணத் தம்பதிகளின் காரின் பின்புறத்தில் ஒரு ஏணியைக் கட்டினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.