புதிய ரயில் சேவையோ அல்லது புதிய ரயில்களோ இணையத்தில் அடிக்கடி வைராலகும். ஆனால், சமீபத்தில் ரயிலின் டிக்கெட் ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. அதிலும், டிக்கெட்டின் விலையோ அல்லது டிக்கெட்டின் வடிவம் குறித்தோ இல்லை, டிக்கெட்டில் இடம்பெற்றிருந்த வாசகம்தான் அந்த வைரலுக்கான காரணம்.
‘ஏசி வசதியுள்ள முதல் வகுப்புகளில் பாலியல் சேவை அளிக்கப்படும்’ என்ற அந்த வாசகம் அடங்கிய டிக்கெட் தான் நெட்டிசன்களால் அதிகம் பரபரப்பட்டு வருகிறது. அதே ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும், அதில் ஒருவர் மட்டுமே அந்த வாசகத்தை முதலில் கவனித்து அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளார்.
ٹرین میں دوران سفر “جنسی سہولیات سے لطف اندوز ہوں” ایسا لکھا ہے مسافروں کو ملنے والے ٹرین ٹکٹوں پر یہ ٹرین سروس پنجاب کے شہروں میانوالی، کندیاں، پپلاں وغیرہ میں چل رہی ہے۔
For more detail must read @MumtaazAwan today’s latest https://t.co/9MGPxrnX8g pic.twitter.com/0eEn54ytZx— Malik Ramzan Isra (@MalikRamzanIsra) October 1, 2022
இதுகுறித்து, பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் விசாரித்தபோது தான், தங்களின் இணையதளம் ஹேக்கர்களால், ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. பாகிஸ்தானின் அரசு துறைகளின் முக்கியமான ரயில்வே துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, தங்களின் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை பயணி ஒருவர் வந்து கூறிய பின்னரே கண்டறியப்பட்டுள்ளது.
جناب اس ٹکٹ پر جن سہولیات کا ذکر ہے اسکی وجہ یہ ہے کہ کل تھل ایکسپریس کا ٹکٹنگ سسٹم ہیک ہو گیا تھا یہ سسٹم ایک پرائیویٹ کنٹریکٹر کے پاس ہے اس نے ریلوے اور ایف آئی اے کو تحریری طور پر شکائت کی ہے کہ اسکا سسٹم ہیک کر لیاگیا تھا لیکن اب سسٹم کو ہیکر کے شکنجے سے آزاد کروا لیا گیا ہے https://t.co/mJBHnXCWL6 pic.twitter.com/y1pLaci0ua
— Hamid Mir (@HamidMirPAK) October 1, 2022
கடந்த செப். 30ஆம் தேதி, கோட் அடு என்ற பகுதியில் இருந்து, வஹோனுக்கு பயணம் செய்ய வந்த பயணிதான், டிக்கெட்டில் அந்த வாசகத்தை பார்த்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச்சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பாகிஸ்தான் ரயில்வே துறை கொடுத்த புகாரை அடுத்து, அந்நாட்டு சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு துறைகளின் இணையதளங்களும், சமூக வலைதளங்களும் ஹேக்கர்களால் அடிக்கடி முடக்கப்பபடுவதும், கைப்பற்றப்படுவதும் தற்போது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ