வேல்ஸ் இளவரசராக அவரை ஒருபோதும் ஏற்க முடியாது: வில்லியத்திற்கு எதிராக மூளும் எதிர்ப்பலை


இளவரசர் வில்லியம் பழமைவாதி, அடக்குமுறைகளின் வழித்தோன்றல் என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

வேல்ஸ் இளவரசர் பட்டம் வில்லியத்திற்கு அளிக்கப்பட்டது, சர்க்கஸ் விளையாட்டு என உறுப்பினர் ஒருவர் கிண்டல்

தேசியவாதிகள் என தங்களை அடையாளப்படுத்தியுள்ள நார்த் வேல்ஸில் உள்ள கவுன்சில் ஒன்று வேல்ஸ் இளவரசராக வில்லியத்தை ஏற்க முடியாது என அறிவித்துள்ளனர்.

பிரித்தானிய ராஜகுடும்பத்து உறுப்பினரான இளவரசர் வில்லியம் பழமைவாதி எனவும் அடக்குமுறைகளின் வழித்தோன்றல் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், வேல்ஸ் இளவரசர் என்ற பட்டத்தை நீக்க வேண்டும் எனவும் நார்த் வேல்ஸில் உள்ள அந்த கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது.

Plaid Cymru தலைமையிலான குறித்த கவுன்சில் இளவரசர் வில்லியம் மீது கடுமையாகவே எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
மன்னர் சார்லஸுக்கு ராணியாரால் வேல்ஸ் இளவரசர் பட்டம் அளிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் வைத்தே, இளவரசர் வில்லியத்திற்கு எதிரான கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் இளவரசராக அவரை ஒருபோதும் ஏற்க முடியாது: வில்லியத்திற்கு எதிராக மூளும் எதிர்ப்பலை | William Prince Of Wales Wales Council Refuses

Image: Bettmann Archive

இளவரசர் வில்லியத்திற்கு குறித்த பட்டமளிக்கப்பட்டது தொடர்பில் உறுப்பினர்கள் எவரும் குறிப்பிடவில்லை என்றே தெரியவந்துள்ளது.
மேலும், வேல்ஸ் இளவரசர் பட்டம் வில்லியத்திற்கு அளிக்கப்பட்டது, ஒரு சர்க்கஸ் விளையாட்டு என உறுப்பினர் ஒருவர் கிண்டலடித்துள்ளார்.

தொடர்புடைய கூட்டத்திற்கு வேல்ஸ் மக்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், இனிமேலும், பிரித்தானிய ராஜகுடும்பத்தால் வேல்ஸ் இளவரசர் பட்டம் சூட்டப்படுவதை அனுமதிக்க வேண்டுமா என்ற விவாதமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் இளவரசர் வில்லியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 46 வாக்குகளும் ஆதரவாக 4 வாக்குகளும் பதிவாகியுள்ளது.
வேல்ஸ் இளவரசர் என்ற பட்டம் என்பது வேல்ஸ் மக்களுக்கு மட்டுமே சொந்தம் என கவுன்சில் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.

வேல்ஸ் இளவரசராக அவரை ஒருபோதும் ஏற்க முடியாது: வில்லியத்திற்கு எதிராக மூளும் எதிர்ப்பலை | William Prince Of Wales Wales Council Refuses

@getty



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.