திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வருகை தந்தார். மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி ஹிந்து விரோத ஆட்சி.
ஹிந்து என்ற வார்த்தையையே உபயோகிக்க கூடாது என்றும் சொல்லும் நபர்களை வளர்த்து வரும் ஆட்சி. மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் கோவில் வழிபாடுகளில் அரசும், அரசு அதிகாரிகளும் தலையிடுவதை கண்டிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழர்களை தவறாக சித்தரிக்கிறார்கள் – வெற்றிமாறனை விளாசிய வேலூர் இப்ராஹிம்
குறிப்பாக பழனி கோவிலில் பல நூறாண்டு காலமாக நடைபெறும் வழிபாட்டு முறைகள் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் கோவில் அதிகாரிகள் தலையிட்டு அவற்றை அழிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நிலை தொடர்ந்தால் பழனியில் இந்து முன்னனி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் திமுக ஆட்சியை கவிழ்க்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடன் உள்ள கட்சித் தலைவர்களே காரணமாக இருப்பார்கள் என்றும், அந்த ஆபத்தை உணர்ந்து ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறையை பிரித்து சைவ சமய அறநிலையத்துறை மற்றும் வைணவ சமய அறநிலையத்துறை என்று உருவாக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருப்பது வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
திருமாவளவன் சொல்வது போல் அவ்வாறு பிரித்தால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை விட ஹிந்துக்கள் சிறுபான்மை இனராக ஆகும்பொழுது தற்போது உள்ள இட ஒதுக்கீட்டு முறையை விட்டுக் கொடுக்க திருமாவளவன் சம்மதிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.