முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தரப்பிற்கு தீப்பந்தம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்திற்கு, உத்தவ் தாக்கரே தரப்பும், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பும் உரிமை கோரிய நிலையில், தேர்தல் ஆணையம் அதனை முடக்கியது.
அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உதயசூரியன் சின்னத்தை ஒதுக்குமாறு இரு தரப்பினரும் கேட்டதால், அது திமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனையடுத்து உத்தவ் தரப்பிற்கு தீப்பந்தம் சின்னத்தையும், சிவசேனா – உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரையும், ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு பாலாசாஹேபஞ்சி சிவசேனா என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
சின்னத்தை தேர்ந்தெடுக்க புதிய பட்டியலை தருமாறு ஷிண்டே தரப்பு கோரியுள்ளது.