கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலின் நடை மாதாந்திர பூஜைக்காக திறந்து மூடப்படுவது வழக்கம். இதன்படி ஐப்பசி மாத ( மலையாளத்தில் துலாம் மாதம்) பூஜைக்காக கோயில் நடை வரும் 17 ஆம் தேதி (அக்டோபர் 17) திறக்கப்பட உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 5 நாட்கள் பூஜைக்கு பிறகு அக்டோபர் 22 ஆம் தேதி நடை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15 ஆம்தேதி மாலை கோயில் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
நவம்பர் 16 ஆம் தேதி முதல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மகரவிளக்கு பூஜை, மண்டல பூஜையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சபரிமலை தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.