சுவிஸ் வங்கியில் கருப்பு பண முதலீடு… 4வது பட்டியலை பெற்றது இந்தியா..!!

இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கும் வகையில் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்வதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் வங்கிகளில் கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் இந்தியர்கள் விபரம் வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்று, சுவிஸ் வங்கிகள் தற்போது, சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இது இந்தியா பெற்றுள்ள நான்காவது பட்டியல் இதுவாகும். பல அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களின் கணக்குகளும் இதில் அடங்கும். இந்த கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடவில்லை. ஏனெனில் இது விசாரணையை பாதிக்கலாம் என்பதால், பெயர்களை அரசு வெளியிடவில்லை.

கணக்கு வைத்திருக்கும் 34 லட்சம் பேர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்ட சுவிஸ்

சுவிட்சர்லாந்து 34 லட்சம் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை இந்தியா உட்பட 101 நாடுகளுடன் பகிர்ந்துள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்களின் கணக்குகளும் அடங்கும். தொடர்ந்து நான்காவது ஆண்டாக கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியல் அனுப்பப்பட்ட சில நாடுகளில் இந்தியாவும் உள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் டேக்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (FTA ) தெரிவித்துள்ளது. இந்த தகவல் கடந்த மாதம் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பப்பட்டதாக FTA தெரிவித்துள்ளது. இப்போது இதுபோன்ற அடுத்த கட்ட தகவல்கள், 2023 செப்டம்பர் மாதம் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.

விவரங்கள் அனுப்பப்படாத 27 நாடுகள்

101 நாடுகளின் பெயர்கள் மற்றும் பிற தகவல்களை சுவிஸ் வங்கிகள் வெளியிடவில்லை. ஆனால் இந்த தகவல் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாக வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். ரஷ்யா உள்ளிட்ட 27 நாடுகளுக்கு தங்கள் கணக்கு வைத்திருப்பவர்கள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் அந்த நாடுகளிடம் இருந்து சில தகவல்கள் கோரப்பட்ட நிலையில், அதற்கான ஆவணங்களை சரியாக தரவில்லை என்றும், அதனால் அந்த விவரங்களை அளிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு முதன் முதலில் 2019 ஆம் ஆண்டில்  தகவல் கிடைத்தது

2019 செப்டம்பரில், சுவிஸ் வங்கிகளிடமிருந்து, சிவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பவர்களின் முதல் பட்டியலை இந்தியா பெற்றது. இதற்காக மற்ற நாடுகளுடன் இணைந்து சுவிஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை தானாகவே, பல்வேறு நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பந்தத்தில் சுவிஸ் அரசு கையெழுத்திட்டது. இந்திய அரசு வட்டாரங்களின்படி, சுவிஸ் வங்கிகளில் இருந்து இதுபோன்ற தகவல்களைப் பெறுவது, வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்யும் நபர்களைப் பற்றிய தகவல்களை அளிக்கிறது. மேலும், சுவிஸ் வங்கியில் எவ்வளவு பணம், நகைகள் வைத்துள்ளனர் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.