உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் குறிவைத்து தூக்கியதற்கு மிக முக்கிய காரணம். இந்நிலையில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள பிக்பாஸ் ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர். அதன்படி இந்த போட்டியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்று முதல் நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது. போட்டியாளர்கள் எல்லோருமே தங்களை பற்றி அறிமுகம் செய்து கொண்டு ஜாலியாகவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே நான்கு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. அதாவது, இன்று முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களை அதிகம் கவராத மூன்று பேர்களை கூற வேண்டும் என்று பிக் பாஸ் கூறியிருக்கிறார். இதனை அடுத்து ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒரு காரணத்தை சொல்லி போட்டியாளர்கள் பெயர்களை கூறியிருந்தார்கள்.
அந்த வகையில் போட்டியாளர்களின் அதிக வாக்குகளை பெற்று ஆயிஷா, சிவின் கணேஷ், ஆர் ஜே மகேஸ்வரி, அமுதவாணன் பெற்றிருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த நான்கு பேரும் தான் அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷன் பட்டியலில் நேரடியாக இடம் பெறுகிறார்கள் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.