உலகின் முன்னணி போன் தயாரிப்பு நிறுவனமான Apple நிறுவனம் அதன் iPhone SE மாடலின் நான்காவது ஜெனரேஷன் போனை வரும் 2024 ஆம் ஆண்டு செய்யவுள்ளது. இந்த மாடல் ஐபோன்களில் குறைந்த விலையில் கிடைக்கும் மாடல் ஆகும்.
இந்த புதிய iPhone SE 4 ஒரு 6.1 இன்ச் LCD டிஸ்பிலே வசதி மற்றும் நோட்ச் டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஐபோன் SE மாடல் அதன் பழைய மாடல் போன்களில் இருந்து மறுஆக்கம் செய்து உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த போன் iPhone XR போனை போலவே ஆச்சு அசலாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் FaceID சென்சார், மவுண்ட் டச் ID சென்சார் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் 6.1 இன்ச் LCD டிஸ்பிலே மற்றும் நோட்ச் உள்ளது. OLED டிஸ்பிலே வசதி இதில் இடம்பெறாமல் இருபது வருத்தமே. இதன் டச் ID அதன் சைடு மவுண்ட் உள்ளே இடம்பெற்றுள்ளது.
Google அறிமுகம் செய்த Imagen Video! உங்கள் கற்பனையை வீடியோவாக உருவாக்கும்!
iPhone SE 4 USB-C போர்ட், A16 Bionic Chip, பேட்டரி போன்றவை XR மாடலில் உள்ள அதே வசதி ஆகும். இதில் பின்பக்க சிங்கள் ரியர் கேமரா இடம்பெறும் என்றும் தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் ஓவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இனி iPhone SE மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த போன் 2024 ஆம் ஆண்டு எப்போது வெளியாகும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்