Five Dangerous Snakes List: பாம்பு மிகவும் பலவீனமானது. ஆனால் அது கடித்தால் மரணம் கூட ஏற்படலாம். அதனால் தான் பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பின் பெயரைக் கேட்டவுடன் மக்கள் பயப்படுவார்கள். பலர் பாம்புகளின் படங்களை பார்த்துவிட்டு தூக்கும் போது கனவில் கூட பயப்படுவார்கள். பாம்புகள் பூமியில் உள்ள மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். உலகில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில பாம்புகள் மிகவும் விஷத்தன்மை கொண்டவை. ஆனால் பாம்பு அதுவாக சென்று மனிதரை கடிப்பதில்லை. மனிதரையோ, பெரிய விலங்கையோ கண்டால் அஞ்சி ஓடிவிடும். ஆனால் அதை சீண்டினால் தொல்லைப்படுத்தினால் தன்னை காப்பாற்றிக் கொள்ள கடிக்கின்றன.
ஒரு அறிக்கையின்படி, இந்தியாவில் 69 வகையான பாம்புகள் மிகவும் ஆபத்தானவை எனக் கூறப்பட்டு உள்ளது. இவற்றில் 29 கடல் பாம்புகள், 40 நிலத்தில் வாழ்கின்றன. இந்த ஆபத்தான பாம்புகள் மனித உயிருக்கு மிகவும் ஆபத்தானவை அதன் விஷமும் கொடியது. அதிக விஷம் கொண்ட சில பாம்புகள் மனிதனைக் கடித்தால், தப்பிப்பது மிகவும் கடினம். உலகின் அதிக விஷம் கொண்ட ஐந்து பாம்புகள் குறித்து பார்ப்போம்.
நாகப்பாம்பு பாம்பு
ராஜா நாகம் என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள காடுகளுக்குச் சொந்தமான விஷமுள்ள எலாப்பிட் பாம்பு இனமாகும். இந்த பாம்பு மிகவும் விஷமானது. இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பிலிப்பைன்ஸ் இனத்தைச் சேர்ந்த நாகப்பாம்பு கடிக்காமல், முன்னாடி இருப்பவர்களின் மீது விஷத்தை வாய் வழியாகத் தெளிக்கிறது. ஒருவேளை இந்த பாம்பு கடித்தால் பாதிக்கப்பட்டவரின் சுவாசம் மற்றும் இதயத்தை அதிகமாக பாதிக்கும். இந்திய நாகப்பாம்பு மிகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இறப்புகள் இந்தவகை நாகப்பாம்பு கடிப்பதால் நிகழ்கின்றன.
இன்லேண்ட் தாய்பான் பாம்பு
Inland Taipan பாம்பு தரையில் வாழ்கிறது. பொதுவாக மேற்கு தைபான், சிறிய அளவிலான பாம்பு அல்லது கடுமையான விஷம் கொண்ட பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது எலாபிடே குடும்பத்தில் மிகவும் விஷமுள்ள பாம்பு இனமாகும். இந்த பாம்பின் கடியில் சுமார் 100 மில்லிகிராம் விஷம் வெளிப்படுகிறது. இந்த பாம்பின் விஷம் நாகப்பாம்பை விட 50 மடங்கு ஆபத்தானது.
சாவ் ஸ்கால்ட் வைப்பர் பாம்பு
இந்த ஆபத்தான பாம்பின் ஒரு கடியில் 70 மில்லிகிராம் விஷம் வெளியிடுகிறது. சாதாரணமாக 5mg விஷம் ஒரு சாதாரண மனிதனை கடுமையாக பாதிக்கும். அப்படி என்றால், இந்த பாம்பின் ஆபத்தை நீங்கள் எளிதாக யூகிக்க முடியும். தென்னிந்தியாவில் இந்த பாம்பின் சில வகைகள் காணப்படுகின்றன். அவை சிறிய அளவில் இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் இந்த பாம்பு கடித்தால் சிகிச்சை அளித்து காப்பாற்றி விடலாம். இதன் காரணமாக மிகக் குறைவான இறப்புகள் மட்டும் ஏற்படுகிறது.
கருப்பு மாம்பா பாம்பு
இந்த ஆபத்தான பாம்பு பூமியில் மிக வேகமாக ஊர்ந்து செல்லக்கூடியது எனக் கூறப்படுகிறது. மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்லுமாம் கருப்பு மாம்பா பாம்பு. இது மிகவும் ஆச்சரியமான விஷயம். கருப்பு மாம்பா கடிக்கும் போது 400 மில்லிகிராம் விஷத்தை வெளியிடுகிறது.
ஈஸ்டர்ன் புலி பாம்பு
உலகிலேயே மிகவும் விஷமுள்ள பாம்புகளில் ஒன்று ஈஸ்டர்ன் புலி பாம்பு. கரிசல் நிறம் காரணமாக புலி பாம்பு என அழைக்கப்படுகிறது. இதன் விஷம் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த பாம்பு மனிதர்களை கடித்தால் அதன் விஷம் காரணமாக சில நொடிகளில், இரத்த உறைவு ஏற்பட்டு அனைத்து நரம்புகளும் முடங்கிவிடும். இதயத் துடுப்பு அதிகமாகி இறக்க நேரிடும். இரண்டு மீட்டர் வரை நீளம் உடைய ஒரு புலி பாம்பு கடித்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.