ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய 2 கடிதங்கள்; சபாநாயகர் அப்பாவு சொன்ன முக்கிய அப்டேட்!

நெல்லை களக்காட்டில் வேளாண்மை துறை சார்பில் 6.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாழைத் தார் ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (அக்டோபர் 12) நடைபெற்றது. இதில் தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மாதம் 8ஆம் தேதி நெல்லையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர்

அறிவித்திருந்தார். அடுத்த ஒரு மாதத்தில் திட்டப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட ஓராண்டிற்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று ஏல மையமும், உற்பத்தி மையமும் செயல்பாட்டிற்கு வந்து மக்கள் பயன்பெறுவார்கள்.

சொன்னதை செய்யக் கூடியவர் நமது முதல்வர். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தேர்தல் அறிக்கையில் இதுதொடர்பான உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. இதனை ஆட்சிக்கு வந்த ஓன்றரை ஆண்டுகளில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக கேள்வி எழுப்புகையில்,

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலா இரண்டு கடிதங்கள் கொடுத்துள்ளனர். நான் இன்னும் படிக்கவில்லை. அவை என்னுடைய பரிசீலனையில் இருக்கின்றன. சென்னை திரும்பியவுடன் கடிதங்களை படித்து பார்த்து என்னென்ன செய்ய வேண்டுமோ? அதற்கு தகுந்த படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சரியான தீர்வு காணப்படும் என்று அப்பாவு கூறினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையில் யார் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக தான் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மாறி மாறி சபாநாயகருக்கு கடிதங்கள் எழுதியுள்ளனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பாக முடிவெடுத்தால் தான், அதற்கான இருக்கையில் உரிய நபர் அமர முடியும். இல்லையெனில் இருவரும் தங்களுக்கே நாற்காலி என சண்டை போட்டுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். இந்த சூழலில் தான் நாளைய தினம் சபாநாயகர் அப்பாவு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.