கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் 50 நியாய விலை கடைகள் அனைத்தும் படிப்படியாக மாநகராட்சியின் சொந்த கட்டிடத்தில் இயங்கும் என மாநகர துணை மேயர் தமிழழகன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கும்பகோணம் 13 வது வார்டு நியாய விலை கடை இன்று திறக்கப்பட்டது. கும்பகோணம் நகராட்சியாக இருந்த போது 45 வார்டுகள் இயங்கின. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் இதன் எண்ணிககை 50 ஆக உயர்ந்தது.
இந்த 50 வார்டுகளுக்கும் தனித்தனி நியாய விலை கடைகள் அமைக்கப்பட்டன. வாடகை கட்டிடங்களில் இயங்கிய இக்கடைகளுக்கு தற்போது மாநகராட்சியின் சொந்த கட்டிடத்தில் இயங்கும் வகையில் புதிதாக நியாய விலைக் கடைகள் கட்டப்பட்டு வருகிறது. படிப்படியாக கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் என இத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை மேயர் தமிழழகன் தெரிவித்தார்.
மேலும் இவ்விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கா அன்பழகன் தமிழக அரசிடம் நிதி இல்லாமல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிரமப்படுகிறது. மேலும் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார். புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் திறந்து வைத்தார்.