பெரும் சோகம்.. ஆம்புலன்ஸ் வர மறுப்பு.. சிறுவன் உடலை சுமந்து சென்ற தந்தை..!

ந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள கே.வி.பி.புரம் மண்டலம் திகுவபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சய்யா. இவருடைய மகன் பசவையா (7). இவர், அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் செஞ்சய்யா மற்றும் குடும்பத்தினர் நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.

சிறுவன் பசவையா வீட்டின் அருகே இருந்துள்ளான். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக கே.வி.பி.புரம் முதன்மை சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்சை அணுகியபோது, அவர்கள் சிறுவனின் உடலை ஏற்றிச்செல்ல மறுத்து விட்டனர். இதேபோல், ஆட்டோ உள்ளிட்ட வாகன டிரைவர்களும் மறுத்துவிட்டனர். இதனால், வேறு வழியின்றி மகன் பசவையாவின் உடலை, தந்தை செஞ்சய்யா தனது தோளிலேயே சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.