மீண்டும் அவமானப்பட முடியாது., மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவை தவிர்க்கவுள்ள ஹரி-மேகன் தம்பதி


இளவரசர் ஹரி, மேகன் மார்க்கல் தம்பதி அவமானத்தைத் தவிர்க்க முடிசூட்டு விழா அழைப்பை நிராகரிக்கலாம் என கூறப்படுகிறது.

மன்னார் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டுவிழா அறிவிக்கப்பட்ட அதே நாள் அவரது பேரன் ஆர்ச்சியின் பிறந்தநாளாகும்.

மேகன் மார்க்கலும் இளவரசர் ஹரியும் தங்கள் அவமானப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அடுத்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழாவிற்கான அழைப்பை நிராகரிக்கக்கூடும் என அரச குடும்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா மே 6, 2023 சனிக்கிழமை அன்று நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

முடிசூட்டு விழா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் மற்றும் கேன்டர்பரி பேராயரால் நடத்தப்படும்.

மீண்டும் அவமானப்பட முடியாது., மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவை தவிர்க்கவுள்ள ஹரி-மேகன் தம்பதி | Harry Meghan King Charles Coronation Humiliation

ஆனால் இந்த விழாவிற்கு, மன்னரின் இளைய மகனும் மருமகளும் ஒரு சரியான காரணத்துடன் அழைப்பை நிராகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

தகவல்களின்படி, மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலை அவரது முடிசூட்டு விழாவில் இருக்கை ஏற்பாட்டுடன் அவமானப்படுத்த தயாராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மன்னர் சார்லஸ் இந்த தம்பதியருக்கு மலிவான இருக்கைகளை வழங்குவார், ஏனென்றால் அவர்கள் அந்த விழாவில் பெரிதாக கவனம் ஈர்க்கபடுவதை அவர் விரும்பமாட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும், மே 6-ஆம் திகதி இளவரசர் ஹரி மகன் மற்றும் மன்னர் சார்லஸின் பேரன் ஆர்ச்சியின் நான்காவது பிறந்தநாள் ஆகும். ஹரியும் மேகனும் விழாவில் பங்கேற்காமல் தவிர்ப்பதற்கு தங்கள் மகனின் பிறந்தநாளும் ஒரு காரணமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

மீண்டும் அவமானப்பட முடியாது., மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவை தவிர்க்கவுள்ள ஹரி-மேகன் தம்பதி | Harry Meghan King Charles Coronation Humiliation

ஆர்ச்சியின் பிறந்தநாளை அரச குடும்பம் பொருட்படுத்தவில்லை என்றும், அதேசமயம் மகனின் பிறந்தநாளில் தந்தையின் முடிசூட்டுவிழாவை ஏற்பாடு செய்து செய்திருப்பது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டிருக்கலாம், ஹரி விழாவில் கலந்துகொள்வதை அரசகுடும்பம் விரும்பவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.