2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க பன்முக விசாவிற்கு தற்போது, சர்வதேச ரீதியில் பலர் விண்ணப்பிக்கின்றனர்.
ஒரே தடவையில் இவ்வாறு விண்ணப்பிப்பதினால் dvprogram.state.gov எனும் தளத்தை அணுகும் போது சேவை தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் இன்று அறிவித்தது.
சர்வதேச ரீதியில் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை காரணமாக இந்த இடைக்கால சேவை தடங்கல் ஏற்பட்டுள்ளது எனவும் தயவுசெய்து பொறுமையாக செயல்படுமாறும் , தொடர்ந்து முயற்சி செய்யுமாறும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மேலும் கூறியுள்ளது.
கிறீன் கார்ட்டுக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 05 தொடக்கம் நவம்பர் 08 ஆம் திகதி 10.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். https://dvprogram.state.gov எனும் இணைய தளத்தினை ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச ரீதியில் இருந்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் வரை தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.