Welcome to parenthood… நயன் – விக்கிக்கு நடிகரின் கடிதம்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா. வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த அவர் பலமுறை தனிநபர் விமர்சனத்தையும் கடுமையாக சந்தித்திருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் தன் உழைப்பால் தற்போது நடிகைகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்துவருகிறார். அவர் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் திருமணம் செய்துகொண்டார். 

திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கியுள்ளனர். இந்தச் சூழலில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியிருக்கின்றனர்.

இதுதொடர்பாக அவர் செய்த ட்வீட்டில், “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, நமக்கு 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டு இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

 

இதனையடுத்து நயன் தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரம் வெளியில் வந்த பிறகு பலரும் நயனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர். அதுமட்டுமின்றி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான விதிகளை இருவரும் பின்பற்றினார்களா எனவும் சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதுகுறித்து இருவரிடமும் விளக்கம் கேட்கப்படுமென்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விதிகளை பின்பற்றித்தான் குழந்தைகள் பெற்றிருப்பர். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம். இதில் ஏன் தேவையில்லாமல் தலையிட வேண்டும் எனவும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “பெற்றோர்கள் உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் நான்கு பேரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த கடிதத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவனும் நன்றி தெரிவித்திருக்கிறார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.