காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தமான் கடல் பகுதியில் வரும் 18-ஆம் தேதி உருவாகும் மேலடுக்கு சுழற்சி, அக்டோபர் 20-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிக கனமழையும், கர்நாடகாவில் சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.