போபால்: இந்தியாவில் முதன் முறையாக, ம.பி.,யில் ஹிந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை, இன்று(அக்.,16) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார்.
ம.பி.,யில் ஹிந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை, இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். இது இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்பிரிவாகும். ம.பி.,யில் 13 அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 3 பாடங்களில் ஹிந்தி கற்பிக்கப்படவுள்ளது
நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் மாணவர்களின் தாய்மொழிக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.
இந்திய கல்வித்துறைக்கு இன்று மிக முக்கியமான நாள். இனி வரும் நாட்களில் வரலாறு எழுதப்படும் போதெல்லாம், இந்த நாள் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்.
நாட்டிலேயே முதன்முறையாக ஹிந்தியில் மருத்துவக் கல்வியைத் துவங்கியதன் மூலம், பிரதமர் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாதாக இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஹிந்தியில் மருத்துவப் படிப்பு துவங்கும் இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். குழந்தைகள் தங்கள் சொந்த மொழியில் படிக்கும் வகையில், அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தீர்மானத்தில் இது ஒரு முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement