கடந்த மே மாதம் 9 ஆம் திகதி தீயிட்டு எரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்டத்தின் பிரதான அலுவலகம் மீண்டும் புனரமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாநகரசபையின் மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட பலரின் தலைமையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எரிந்த பொருட்கள் மற்றும் எரிந்த பஸ்ஸை அங்கிருந்துஅகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பி்க்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் இந்த அலுவலகம் முழுமையாக புனரமைக்கப்படும் என கூறப்படுகின்றது.
குருணாகலில் கூட்டம்
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்தக்கட்ட கூட்டம் குருநாகலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.
ரோஹித அபேகுணவர்தன தலைமையில் இடம்பெற்ற களுத்துறை கூட்டத்திற்கு சென்ற மஹிந்த, மகிந்தானந்தவின் தலைமையில் நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்.
பொதுத் தேர்தல்
அதற்கமைய, ஜோன்ஸடன் பொ்னாண்டோ தலைமையில் குருநாகலுக்கு மஹிந்த கூட்டம் நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளமையினால் இந்த அலுவலகத்தை புனரமைக்கு நடவடிக்கை வேகமாக முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.