மதுரை: கொள்முதல் குறைந்ததால் மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 40 ஆயிரம் லிட்டர் கொள்முதல் குறைவால் மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய பால் 3 மணி நேரம் தாமதமாக விநியோகம் செய்யப்பட்டது. கொள்முதல் விலை உயர்த்தப்படாததால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பாலை விற்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.