சதுரகிரி மலையில் பெய்த கனமழை காரணமாக கல்லணையாறு, லிங்கம் கோவில் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை துவங்கி கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சதுரகிரி மலைப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கல்லணை ஆற்றுப்பாலம், லிங்கம் கோயில் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என அதிகாரிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM